அண்ணாமலை நடைபயணம்
கீழ்வேளூர் தொகுதியில் பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.;
கீழ்வேளூர் தொகுதியில் பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை, ராமேசுவரத்தில் துவங்கினார் இந்த நடைப்பயணத்தில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்' என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த சில நாட்களாக யாத்திரை நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து நேற்று மாலை நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பைபாஸ் சாலையில் தனது கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கான நடைபயணத்தை தொடங்கினார் அங்கு ஏராளமான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மேள தாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தனது நடை பயணத்தை கீழ்வேளூர் கச்சனம் சாலையில் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து நடைபாதை தொடங்கி தெற்கு வீதி மேல வீதி வடக்குவதி வழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கீழ்வேளூர் கீழ வீதிக்கு வருகை தரும் அண்ணாமலை அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றினர் அதனை தொடர்ந்து புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.