மேட்டூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே மேச்சேரியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடைபெற்றது.

Update: 2024-01-09 07:37 GMT

 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை

மேட்டூர் அருகே மேச்சேரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபெற்றது. அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் 516 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது இதில் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தெரிவித்தார் ஆனால் இதுவரை 20% தேர்தல் வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை தூர்வாரி கூடுதலாக 30 டி.எம்.சி, தண்ணீர் சேமிக்க ரூ 3,000 கோடி செலவாகும் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு நிதி இல்லை எனக் கூறி மேட்டூர் அணையை தூர் வாரும் நடவடிக்கையை கைவிட்டது. கொளத்தூரில் உள்ள தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்றினால் மேட்டூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும். மோடி ஆட்சி 9 ஆண்டு காலத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. வரும் 2024-ல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதன் மூலம் 5 - வது இடத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம். 3-வது இடத்திற்கு முன்னேறும் தெரிவித்தார்.
Tags:    

Similar News