மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இருபெரும் விழா
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;
Update: 2024-02-22 00:41 GMT
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா தலைமை தாங்கினார். இதில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.