ராமநாதபுரம்: துவக்கப்பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம் தொண்டி அரசு கிழக்கு துவக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-01-25 17:07 GMT

ஆண்டு விழா

ராமநாதபுரம் தொண்டிவட்டார கல்வி அலுவலர் புல்லாணி தலைமை வகித்தார். ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்றார். ஒன்றிய பெருந் தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை ராஜ், பேருராட்சி தலைவி ஷாஜகான் பானு , துணைத் தலைவி அழகு ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி கார்த்திகா, பிடிஏ தலைவர் சீனிவாசன், கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் செயல்பாடுகள் வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் பேசினார். ஆசிரியை கலாராணி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டி , கட்டுரைப் போட்டி , பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்வியாளர்கள் ராமு, வீரக்குமார்.கண்ணபிரான், பார்த்தீபன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.

ஆசிரியர் மெர்சி ராணி, டெய்சி, மரிய ஜெயா. மாலினி பொன்சேகா ஏற்பாடு செய்திருந்தனர். நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News