கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்லூரியில் ஆண்டு விழா
கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்லூரியில் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 08:36 GMT
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் முனைவர் சிவா வரவேற்றார்.
அறங்காவலர் குழு உறுப்பினர் முனைவர் சிவப்பிரகாசம், அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சிங்காரவேல் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.