கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா
கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-30 13:28 GMT
ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் 19-வது வருட ஆண்டு விழா, விளையாட்டு விழாவை திரை நட்சத்திரங்கள் கிளி ராமச்சந்திரன், பாவா லெட்சுமணன் மற்றும் சித்ரகுப்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. மாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் மாலினி விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் தாளாளர் விக்னேஷ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் ஜெயக்குமாரி, சரவணன், அருள்தாஸ், கருணாநிதி, துணை முதல்வர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.