பனமரத்துப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் ஆண்டு விழா

பனமரத்துப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-13 03:15 GMT

ஆண்டு விழா 

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி, பேச்சு, பாட்டு, விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வேங்கை அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மைதிலி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News