அரசு பள்ளியில் ஆண்டு விழா
சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-02-13 03:52 GMT
கலை நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மழலையரின் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வமலர் தலைமை வகித்தார். படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.