ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா

கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-02-12 05:25 GMT

 ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா, உறுப்பினர்கள் வினிதா, சோனியா, தெய்வானை, கவிதா முன்னிலை வகித்தனர். விழாவில் வட்டார வளமைய பயிற்றுனர் செந்தில்முருகன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் வினோத் நன்றி கூறினார்.
Tags:    

Similar News