சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா
தென்காசி அருகே சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது.;
Update: 2024-03-12 06:26 GMT
சிவ சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்க சிவசரஸ்வதி வித்யாலயா மழலையர், தொடக்க- மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமர்சேவா சங்க அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, எஸ்.சுலோச்சனா கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செங்கோட்டை கணேஷ்குமார், கோவில்பட்டி ஹரிபாலன், திருநெல்வேலி இலந்தைகுளம் வரதராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.