குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2024-06-12 15:35 GMT
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி! திருப்பூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் துவங்கிய பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பதாதைகளை கையில் எந்தி சென்றனர்.