மேலூர்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு:
மேலூர் அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆவண காப்பக அறையில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 1.80 இலட்சம் பறிமுதல் செய்தனர்.
மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்முருகன் என்பவர் மேலூர் மூவேந்தர்நகரில் தங்கியிருந்து பணி புரிந்து வருகின்றார்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு மற்றும் குமரகுரு, மாவட்ட ஆய்வு அலுவலர் சிங்கார வேலன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர். கருங்காலக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆவண காப்பக அறையில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 1.இலட்சத்து 80 ஆயிரத்து 700 இருந்தது. இதுதொடர்பாக, சார் பதிவாளர் அருள்முருகன் மற்றும் பதிவாளர் அலுவலக பணியாளர்களிடம் தனித் தனியாக , அலுவலக அறைகளில் வைத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பணம் பறிமுதல் செய்து இருப்பது. அரசு அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பேட்டி: விஜயகுமார் திமுக பிரமுகர்