சாத்தூரில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சாத்தூரில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடு உட்பட அடுத்தடுத்து இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-03-12 10:45 GMT
 சாத்தூரில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடு உட்பட அடுத்தடுத்து இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Lவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை ஊராட்சி மன்ற தலைவராக பார்த்தசாரதி என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் மேட்டமலை ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்த சாரதி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க விதிகளை மீறி பணம் பெற்றுக் கொண்டு போலி ரசிது வழங்குவதாக வந்த புகாரை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பார்த்த சாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமசந்திரன் தலைமை யிலான 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலையில் தீடீரென சோதனையில் ஈடுபட்டனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையின் போது ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி வீட்டில் இல்லாததால் அவருடைய மனைவி யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மேட்டமலை ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதியின் நெருங்கிய நண்பரும் மேட்டமலை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் செயலாளருமான கதிரேசன் என்பவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மேட்டமலை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் செயலாளருமான கதிரேசன் என்பவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மிக முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் சாத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News