மதுரை ஏர்போர்ட்டில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

மதுரை ஏர்போர்ட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுங்க பிரிவு அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2024-06-26 10:02 GMT

மதுரை ஏர்போர்ட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுங்க பிரிவு அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு -சுங்க பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்  துறையினரால்  விழிப்புணர்வு கையெழுத்து  பேரணி - பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர் தமிழ்நாடு முழுவதும் இன்று போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதை ஒழிப்பை முன்னெடுக்கும் விதமாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது.

அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பை முன்னெடுப்பும் விதமாகவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து பலகையானது விமான நிலையம் நுழைவாயில் மற்றும் பயணிகள் உள்ளே வெளியே வரும் வழிகளில் சுங்க பிரிவத்துறை அதிகாரிகள்  சார்பாகவும் மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்திடும்  பலகையானது வைக்கப்பட்டது.

மேலும் உள்ளே மற்றும் வெளியே வரும் பயணிகளிடம் மத்திய பாதுகாப்பு படையினர் துணை ஆணையர் விஸ்வநாதன் அவனியாபுரம் காவல் துணை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து பயணிகளுக்கு போதை ஒழிப்பு  விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை கொடுத்து போதையினால் எந்த அளவு விபத்துகளும், ஆபத்துக்களும், போதையினால் மனிதனின் உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து பயணிகளுக்கு விரிவாக  எடுத்துரைத்தனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பலகையில் பயணிகள் முன்வந்து போதையை இனி பயன்படுத்த மாட்டோம் என்று காவல்துறை அதிகாரிகளிடம் முன்  உறுதி மொழி எடுத்துக் கொண்டு போதை ஒழிப்பு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வமாக கையெழுத்திட்டு சென்றனர்.

Tags:    

Similar News