போதை தடுப்பு குழு போலீசார் உடன் ஆவடி கமிஷனர் ஆலோசனை
Update: 2023-12-13 11:44 GMT
கமிஷனர் ஆலோசனை
உயர்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, போதை தடுப்பு குழு அமைக்க, ஆவடி போலீஸ் கமிஷனர் ஆலோசித்தார். சென்னை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில்,போதை தடுப்பு குழு அமைக்கும் ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஆவடியில் நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், உயர்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் சிலர், தவறான நடப்புகளால் போதை பழக்கத்திற்கு ஆளாகி, எதிர்காலத்தை வீணடித்துக் கொள்கின்றனர். இதனால், மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, 'போதை' தடுப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.