பழங்கால ஆவணங்கள்: கலெக்டர் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால ஆவணங்கள் எண்முறை மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்

Update: 2024-01-27 08:12 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1801முதல் 1946ம் ஆண்டு வரையிலான தர்பார் ஆவணங்கள், பழைய திவான் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய ஆவணங்கள், நிலமெடுப்பு தொடர்பான ஆவணங்கள், புதுகை மாவட்டம் தொடர்பான அரசிதழ்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அனைத்தும் புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழைய ஆவணங் கள் சேதமடையாத வகையில் பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கும், பழைய ஆவணங்களை எண்முறை (டிஜிட்டல்) மயமாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறி வுறுத்தினார். ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் கவியரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்
Tags:    

Similar News