சேலத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் அப்போலா சர்க்கஸ் !

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அப்போலா சர்க்கஸ் தொடங்கி நடந்து வருகிறது. அரங்கை அதிர வைக்கும் மணிப்பூர் கலைஞர்களின் சாகசங்கள்.

Update: 2024-03-07 12:11 GMT

அப்போலா சர்க்கஸ்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அப்போலா சர்க்கஸ் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. சர்க்கஸ் தொடங்கியதில் இருந்து ஆண், பெண் கலைஞர்கள் தங்களது சாகசங்களை அரங்கேற்றம் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் அந்தரத்தில் பறந்து சாகசம் செய்வதில் தொடங்கி கத்திமேல் படுத்து கிடப்பது வரை ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை பதை பதைக்க செய்கின்றன. ஒரு குண்டு ஊசி தொண்டை குழிக்குள் சிக்கினாலே நாம் படும் பாடு சொல்லி மாளாது. ஆனால் ஒரு நேரத்தில் 6 கத்திகளை தொண்டைக்குள் சொருகி அதனை அப்படியே வெளியே எடுக்கும் காட்சிகள் நம்மை இருக்கையின் நுனிக்கே வரவழைத்து விடுகின்றன. இப்படி திக்.. திக்.. காட்சிகள் ஒருபக்கம் இருந்தாலும், அதற்கு இடையே கோமாளி கலைஞர்களின் நகைச்சுவை காட்சிகள், அதுவும் சினிமா சூட்டிங் காட்சிகள் சிறுவர், சிறுமிகளை மட்டும் அல்ல நம்மையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. பெண் கலைஞர்களின் சாகசங்கள் நெஞ்சை பதை பதைக்க செய்கின்றன. சேலம், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு இந்த சர்க்கஸ் சிறந்த பொழுதுபோக்காக அமைந்து இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காட்சிகளை காண பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும் தொடர்பு கொள்ளலாம். சேலம் மக்களை மகிழ்விக்கும் சர்க்கஸ் காட்சிகள் இன்னும் சில நாட்கள் மட்டும்தான் என்றும், எனவே கலைஞர்களின் சாகசங்களை கண்டு களிக்குமாறு சர்க்கஸ் உரிமையாளர் சனல் ஜார்ஜ், ஈரோடு பாபு ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News