தபால் வாக்களிக்க முதியோர்களுக்கு விண்ணப்பம்
தபால் வாக்களிக்க முதியோர்களுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-03-22 09:05 GMT
சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் தனி சீருடை அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத் திடம் தெரிவித்துள்ளோம். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கும் வகையில், அவர்களது வீடுகளுக்குச் சென்று 12 டி படிவம் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23, 24 தேதிகளில் மீண்டும் வீட்டுக்கே சென்று பெறப்படும் என தெரிவித்துள்ளார்