குழந்தைகள் நலக்குழுவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-20 02:24 GMT

ஆட்சியர் சாந்தி 

 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 20105ம் ஆண்டின் இளைஞர் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவில் காலியிடமாக உள்ள 1 தலைவர், 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக உரிய தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலக்குழுவிற்கு 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படை யில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் உளவியல், மனநல மருத்துவம், சமூகப்பணி, சட்டம், சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வய தைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண் டும்.

Advertisement

ஒரு நபர் குழந்தைகள் நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியம னம்செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுக்கு பதவி வகிப்பார். இதற்கான விண் ணப்ப படிவத்தை தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ் சாலை,சென்னை -600010 என்ற முகவரியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்ப டையில் நியமனம் அமை யும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News