டேட்டாஎன்டரி தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

டேட்டா என்டரி தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியா் உமா தகவல்;

Update: 2023-12-18 15:59 GMT

டேட்டா என்டரி தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டப் பிரிவில் காலியாக உள்ள கணினி தரவு பதிவாளர் (Data Entry Operator) பணியிடங்கள் ரூ.12,000/-ம் மாத தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, நாமக்கல், இராசிபுரம், புதுச்சத்திரம் ஆகிய 5 ஊராட்சிகளில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advertisement

கணினி தரவு பதிவாளர் பணிக்கான தகுதியாக அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும், கணிணியில் எம்.எஸ்.ஆபிஸ் (M.S.Office) அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும், கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை என மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்று 28.12.2023 பிற்பகல் 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News