சர்ச்'களை பழுது நீக்க விண்ணப்பம் வரவேற்பு

சர்ச்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

Update: 2024-06-25 07:20 GMT

சர்ச்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.


சர்ச்கள் பழுது மற்றும் புனரமைக்கும் பணியை, அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது, கட்டடத்தின் தன்மைகளுக்கு ஏற்ப மானிய தொகை உயர்த்தி உள்ளது. 10 - 15 ஆண்டு வரையில் இருக்கும் கட்டடத்திற்கு, 2 - 10 லட்சம் ரூபாய். மேலும், 15 - 20 ஆண்டு வரையில் இருக்கும் கட்டடத்திற்கு, 4 - 15 லட்சம் ரூபாய். இதுதவிர, 20 ஆண்டுக்கு மேல் இருக்கும் கட்டடங்களுக்கு, 6 - 20 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. இதில், மைக்செட், நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான பாத்திரங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் மற்றும் பக்தர்கள் தேவையான பெஞ்சுகள், சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, திட்ட மதிப்பீடு ஆகியவை ஆய்வு செய்து, சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும். அரசு நிதியுதவி, இரு தவணைகளாக கலெக்டர் ஒப்புதலுடன் சர்ச்சின் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யப்படும். எனவே, சர்ச்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News