தெற்கு ரயில்வேயில் அப்ரன்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரன்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
தெற்கு ரயில்வே
ரெயில்வேயில் 2023-2024-ம் ஆண்டில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை, போத்தனூர், பெரம்பூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், அரக்கோணம், திருச்சி, பொன்மலை, மதுரை ஆகிய ரெயில்வே கோட்டங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 795 அப்ரண்டீஸ் பணிகள் உள்ளன. இதில் சேலம் கோட்டத்தில் 294 காலியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு கல்வி தகுதி 10-ம் வகுப்பு அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ.யில் பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், வெல்டர், கார்பெண்ட ர் ,பிளம்பர், வயர்மேன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ளவர்கள் www.sr.indianrailwaysgov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் விலக்கு பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ். சி. ,எஸ்.டி. மாற்றுத்திறனாளிகள் பெண்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.