நாட்டுப்புறக் கலை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில், நாட்டுப்புறக் கலை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:32 GMT
கும்பகோணம் அருகே கொட்டை யூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில், பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக முதல்வர் அருள் கல்லூரி அரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப் புற கலை பயிற்சி மையங் கள் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் 4 கரகாட்டம், தப்பாட்டம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம் ஆகிய 4 நாட்டுப்புற கலைகளுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜன. 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளன. வாரந்தோறும் வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள், மாலை மணி முதல் மாலை 6 மணி வரை பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர இக்கலைகளில் ஆர்வம் உடைய-17 வயது நிரம்பிய- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள், இல்லத்தரசிகள், பணிக்கு செல்வோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்க லைக்கழகத்தால் பயிற்சி சான்றி தழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை கட்டணம் 5.500. பயிற்சியில் சேர விரும்புவோர் கல்லூரிக்கு வேலை நாட்களில் வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.