தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வரும் 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
தொழிற்கல்வி பெறுவதற்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர வரும் 7-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெக்கானிக் டெக்னிக்கல் போன்ற பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வுட் ஒர்க் டெக்னீசியன், லெதர் குட்ஸ் மேக்கர் மற்றும் லெதர் குட்ஸ் மேக்கர் (டி.எஸ்.டி) போன்ற பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு ஆண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம்.
14 முதல் 40 வரை வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ரூ.50 விண்ணப்ப கட்டணத்தை நெட் பேங்கிங் மற்றும் ஜி.பே மூலம் செலுத்தலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண்ணிற்கான கலந்தாய்வு தரவரிசையும் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகையாக மாதம் ரூ.750 மற்றும் அரசு அறிவிக்கும் சலுகைகள் வழங்கப்படும். மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.