மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக பராமரிக்கும் சிறந்த நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-01 07:47 GMT

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது வளாகத்தை ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக பராமரிக்கும் சிறந்த நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .இதற்கான விண்ணப்பங்கள் https://theni.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News