தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Update: 2024-01-31 11:53 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது. 29.02.2024 நள்ளிரவு 11.59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்;. 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் சுவுபுளு/Nநுகுவு மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வுகட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.29.02.2024 இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி எண்:044-22501006 (113)-ஐ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.