முன்மாதிரி திருநங்கை விருதிற்கு விண்ணபிக்கலாம் – ஆட்சியர் தகவல்
முன்மாதிரி திருநங்கைக்கான விருதிற்கு திருநங்கைகள் விண்ணபிக்கலாம் என தேனிமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024 ஆம் நிதியாண்டில் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதியன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று ஆகியவற்றுடன் வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட விருதினை பெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேற்காணும் தகுதியுடைய திருநங்கையரது உயிர் தரவு (Bio Data), 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சுயசரிதை, தனியரை பற்றி தமிழில் ஒருபக்கம் அளவிலான விவரம், விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்) சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படம், சேவையை பாராட்டியற்கான பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் / சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயடைந்த விவரம் மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்றுடன் உரிய கருத்துருவினை awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 31.01.2024-க்குள் விண்ணப்பித்து, அதற்கான கையேடு (Booklet) தமிழில் அச்சு செய்யப்பட்டு 2 நகல்களை மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.