அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-03-06 00:42 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்கு மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பிப். 3ம் தேதி நடைபெற்ற 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வினை (என்எம்எம்எஸ்) சங்ககிரி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 பேர் தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையம் தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இதில 8ம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஹர்ஷிதா,பவித்ரா, சுருதிகா, வேதவர்ஷினி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை மத்தியரசால் வழங்கப்பட உள்ளது.

தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கவசந்தாள் தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் இரா.முருகன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.அப்போது ஆசிரியர்கள் ந.மு.சித்ரா, அனிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஸ்வேதா, மாதேஸ்வரி, தேவண்ணகவுண்டனூர் கிளை நூலகர் குமரேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News