நீச்சல் போட்டியில் மாநில அளவில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

உசிலம்பட்டி அருகே அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-15 10:17 GMT

 நீச்சல் போட்டியில் மாநில அளவில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா

உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தினன விழாவையொட்டி மாநில அளவில் சென்னை வேளச்சேரியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இதில் கலந்து கொண்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி ,அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் சத்தியா, ஜெயந்தி, நித்யா, பிரியதர்ஷினி, பாண்டீஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டு 400 மீட்டர் மிட்லேரிலே பிரிவு போட்டியில் தங்கப் பதக்கமும், 400 ஃப்ரீஸ்டைல் பிரிவு போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.இந்நிலையல் க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு சீர் மரபினர் துறை உறுப்பினர் சந்திரன், தலைமையில் திண்டுக்கல் அண்ணாமலை பல்கலைக்கழக பொறுப்பு அதிகாரி மாதவன், முன்னிலையில் மம்மி டாடி ரெடிமேட் ஜவுளி கடை உரிமையாளர் நிஜாம், ஆகியோர் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சரவணகுமார். உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், விஜி, ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்,
Tags:    

Similar News