அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
கெங்கவல்லி அருகே கூடமலை அரசு பள்ளியில் அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 10:25 GMT
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லிவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை அரசு பள்ளியில் அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ வும், திமுக மாவட்ட துணை செயலாளருமான சின்னதுரை தலைமை வகித்து பேசினார். மேலும், அரையாண்டுத் தேர்வில் 10,11 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரபாகரன், ஹரினிஸ்ரீ, சுவாதிபேபி, ஷாலினி, கோபிகா, பாவனா, மற்றும் பிரதாப், திவ்ய தர்ஷினி, சுப்ரமணியன் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு நடை பெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவர் அருண் பாண்டியனுக்கும் பரிசுவழங்கினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா, ஒன்றிய திமுக துணை செயலாளர் மணிமாறன் மற்றும் பிடிஏ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.