தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் சுக்காம்பட்டி ஊராட்சி தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-03-14 08:07 GMT

 பாராட்டு விழா

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சுக்காம்பட்டி ஊராட்சியில் உள்ள தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு இணைய வழி கல்வி வானொலியில் பள்ளி மாணவ மாணவிகள் 16 பேர், பதினாறு நாட்களில்,16,000 க்கும் மேற்பட்ட அறிவியல் பாடம் சார்ந்த ஆடியோக்களை இணைய வழி வானொலியில் பதிவு செய்தனர்.

இந்த பதிவினை ஆல் இந்திய புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை நிகழ்வில் சேர்த்தது. இந்த சாதனையில் ஈடுபட்ட 16 மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் இயக்குனர் வெங்கடேசன், சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் தலைமையில், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வமேரி,புளோர ஆரோக்கிய மேரி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி திட்ட விளக்க உரையாற்றினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். இறுதியில் இடைநிலை ஆசிரியர் சிவராஜ் நன்றிதெரிவித்தார். இந்நிகழ்வில் தண்டலை புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புகழேந்தி, சுக்காம்பட்டிஊராட்சி மன்ற தலைவர் விமலா கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தியாகராஜன், ராம் பிரசாத், மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News