இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா
இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 12:55 GMT
பரிசு வழங்கி கவுரவிப்பு
கல்லுாரி மாணவர்களுக்கிடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் அரவிந்தன் 3ம் பரிசு பெற்று, மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இதேபோல் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய அளவில் நடந்த ரங்கோலி போட்டியில் மாணவி அட்சயா இரண்டாமிடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற இருவருக்கும் கல்லுாரி சார்பில் பாராட்டு விழா நடந்தது.