உடல் தானம் அளித்தவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
பழனி லயன் சங்க முக்கிய உறுப்பினர் உடல், கண் தானம், ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் திண்டுக்கல் லயன் கே ஆர் கே ஒருங்கிணைப்பாளாருக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 10:11 GMT
திண்டுக்கல் அருகே உடல் தான் அளித்தவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாபெரும் போற்றுதலுரிய சேவையாகதன் இறப்பிற்குப் பின்னர் தன் உடலை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்தனர் .பழனி லயன் சங்க முக்கிய உறுப்பினர் லயன் டாக்டர் மதனகோபால், இவரது சகோதரர் மோகனசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தரம் ஆகியோர் தன்னுடைய சொந்த உடலை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார்கள். இறந்த பின் உடல், கண் தானம் செய்ய வேண்டும். இறக்கும் முன் உடல், கண் தானம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய விரும்புபவர்கள் திண்டுக்கல் லயன் கே ஆர் கே ஒருங்கிணைப்பாளர் செல் 9842541555ல் தொடர்பு கொள்ளலாம்.