நெருங்கும் பாராளுமன்றத் தேர்தல் - அலுவலகம் அமைக்கும் பணியில் கட்சிகள்

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Update: 2024-02-25 14:53 GMT

அரசியல் கட்சிகள் 

இந்திய பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை தற்போது உள்ளது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் . பாராளுமன்ற தேர்தல் குறித்து  மாநில அளவில் உள்ள திமுக ,காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் , பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது, பூத் கமிட்டி அமைப்பது வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது என தேர்தல் கால பணிகளை உடனடியாக  மேற்கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட கட்சி  அமைப்புகளுக்கும் அவர் அவர் கட்சி தலைமை  உத்தரவிட்டுள்ள நிலையில் , தேர்தல் காலத்தில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தனி அலுவலகம் அமைத்து செயல்படும் வகையில்.உள்ளூர் மட்டத்தில் செயல்படும்  பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளுக்காக அலுவலகங்களை வாடகைக்கு எடுப்பதற்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News