ஆரணியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தினக்கூலி ரூ.319-ஆக உயர்த்தப்பட்டதை உடனடியாக அமல்படுத்தக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-04-02 16:12 GMT
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தினக்கூலி ரூ.319-ஆக உயர்த்தப்பட்டதை உடனடியாக அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செய்தி தொடர்பாளர் வி. ஜி. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் முள்ளிப்பட்டு தேசிங்கு, வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி குப்பன், கேளூர் பாலகிருஷ்ணன், மடவிளாகம் சிவா, பையூர் பாஞ்சாலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.