போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? நாமக்கல்லில் இலவச பயிற்சி. -மாவட்ட ஆட்சியர் தகவல்

TNPSC GROUP - IV தேர்விற்கு இலவச TEST BATCH, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது.

Update: 2024-02-27 09:07 GMT

மாவட்ட ஆட்சியர் 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP - IV தேர்விற்கு இலவச TEST BATCH, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு வெளியான TNPSC GROUP IV தேர்வில் 22 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர். TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்று பணியில் உள்ளனர்.

TNUSRB PC தேர்வில் 17 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2024 ஆம் ஆண்டு வெளியான TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தற்போது வந்துள்ள TNPSC GROUP II முதன்மை தேர்வில் 9 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகியியுள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவசபயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2-Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

மேலும், http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News