அரிமளம் அம்மன் கோயில் தேரோட்டம்!
அரிமளம் ஜெயவிளக்கியம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 07:13 GMT
அரிமளம் அம்மன் கோயில் தேரோட்டம்
அரிமளம் ஜெயவிளக்கியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 13ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து 19ஆம் தேதி காப்பு கட்டுதல்யுடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதும் நாட்டார் நகரத்தார் மற்றும் அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளை வலம் வந்து தேர் நிலையையே அடைந்தது. விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.