ஆற்காடு: கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
சர்வந்தாங்கல் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
Update: 2023-11-06 05:28 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சர்வந்தாங்கல் கிராமத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி துவக்கி வைத்தார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 3 ஆயிரம் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் கால்நடை மருந்தகங்கள் மூலம் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. 21 நாட்கள் இந்த முகாம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது. கோமாரி நோய் தடுப்பூசி போடுவதினால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்று முன்னேச்சரிக்கையாக தடுக்கப்பட்டு கால்நடை உயிரிழப்புகளை தடுக்கப்படுகிறது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் ஊட்டச்சத்து தாது உப்புக்கள் வழங்கப்படுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தாது உப்புக்கள் வழங்கப்படுகிறது. ஆகவே கால்நடை விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் உதவி இயக்குனர் கால்நடை மருத்துவர் உதய சங்கர் கால்நடை மருத்துவர்கள் ஹரிஹரன் , சரத் பாபு, ரகு வட்டாட்சியர் வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.