கொடுக்கல் வாங்கல் தகராறு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது
சேலத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைதால் பரபரப்பு
Update: 2024-02-08 11:41 GMT
சேலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் டாக்டர் வரதராஜ் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் மகன் சந்தோஷ் (22). மின்னாம் பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ, இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் எருமாபாளையம் மெயின்ரோடு விஓசி நகரில் நண்பர்களுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அருகில் அவரது நண்பரான அதேப்பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (27) தங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தினேஷ்குமார், தனது நண்பரான தருண் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த தொகையை தருண் திரும்ப கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், பணத்தை திரும்ப கேட்ட தருணை தாக்க போவதாக தினேஷ்குமார் கூறியுள்ளார். அதனை நண்பரான சந்தோஷ் தடுத்துள்ளார். அப்போது சந்தோசுக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பிளேடால் சந்தோசின் கையில் தினேஷ்குமார் கிழித்து விட்டார். இதனால் சந்தோசுக்கு ரத்தகாயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது பற்றி கிச்சிப்பாளையம் எஸ்ஐ ராஜா. விசாரணை நடத்தி, மாணவர் சந்தோசை தாக்கிய தினேஷ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.