மது அருந்துமிடத்தில் தகராறு - அடிதடி தந்தை மகன் கைது
மயிலாடுதுறை அருகே கருவாழக்கரையில் மது அருந்தும் இடத்தில் காளியம்மன் கோயிலை சேர்ந்த சபாநாயகம் வள்ளுவர் தெரு சேர்ந்த சக்திவேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். சபாநாயகர் தாக்கி தந்தை மகன் கைது.;
Update: 2024-03-26 16:47 GMT
காவல்துறை விசாரணை
மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரையை சேர்ந்த சிவலிங்கம் மகன் சபாநாயகம்( 45) இவர் சம்பவ தினத்தன்று அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த கருவாழக்கரை வள்ளுவர் தெரு சேர்ந்த சக்திவேல் (63) என்பவர் மது கேட்டதில் இருவருக்கும் வாய் சண்டை முற்றி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த சபாநாயகத்திடம் எப்படி என்னை அடிக்கலாம் என்று கேட்டு அவரை அடித்த பொழுது சக்திவேல் மகன் மணிகன்டனும் சேர்ந்து கொண்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்ங விடுத்துள்ளார் . காயமடைந்த சபாநாயகம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.