கஞ்சா கடத்திய மூவர் கைது-கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே ஒரிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது-கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து விசாரணை

Update: 2024-03-02 09:41 GMT

கஞ்சா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி அருகே ஒரிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது-கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து விசாரணை-பல்வேறு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கந்திலி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காரில் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலை தொடர்ந்து தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். கஞ்சா ஒரிசாவில் இருந்து பல்வேறு வாகனங்களின் மூலம் மாற்றி மாற்றி கடத்தி வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. சின்னகந்திலி அருகே டவேரா கார் வந்த போது அதில் 20 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. காரில் வந்த மகனூர்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்துரு (23) இவர் மீது காட்பாடி பகுதியில் மூன்று வழக்கு நிலுவையில் உள்ளது. எக்கூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19) மற்றும் கீழ் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்திர பிரகாஷ் (26) இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழிப்பறி, திருட்டு, உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் பகுதிகளில் இவர் மீது வழக்குகள் உள்ளது. கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடதக்கது. மூவரையும் கைது செய்து கந்திலி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இன்னும் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News