ஒர்க் ஷாப் தொழிலாளிடம் கைவரிசை காட்டியவர் கைது
ஒர்க் ஷாப் தொழிலாளிடம் கைவரிசை காட்டியவர் கைது;
Update: 2024-01-30 10:33 GMT
களக்காடு காவல் நிலையம்
நெல்லை களக்காடு பகுதியை சேர்ந்த நாராயணன் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவர் கோபாலசமுத்திரம் சென்று பழைய உதிரி பாகங்களை வாங்கி விட்டு வந்தபோது அங்கு வந்த அய்யப்பன் மற்றும் இருவர் சேர்ந்து நாராயணனை வழிமறித்து சட்டை பையில் இருந்த ரூ. 340 பணத்தை பறித்து கொண்டு ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர் நாராயணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் அய்யப்பனை இன்று கைது செய்தனர்.