தகராற்றை தட்டி கேட்டவரை தாக்கியவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், ரெங்கசமுத்திரம் பகுதியில் தகராற்றை தட்டி கேட்டவரை தாக்கியவர் கைது;
Update: 2024-04-22 07:56 GMT
தகராறை தட்டி கேட்டவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் என்ற ஊருக்கு வெளியூரை சேர்ந்த நபர் ஒருவர் வந்துள்ளார். அந்த நபரிடம் நேற்று அப்பகுதியை சேர்ந்த பச்சாத்து என்பவர் தகராறு செய்துள்ளார்.இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த மற்றொரு நபரான குமார் தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பச்சாது குமாரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பச்சாதை போலீசார் நேற்று (ஏப்.21) கைது செய்தனர்.