குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது.

Update: 2024-04-05 05:14 GMT

வெங்கடேசன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாலுகா, வாரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி மகன் வெங்கடேசன்,33; கடந்த சில வாரங்களுக்கு முன் சாராயம் விற்றுக்கொண்டிருந்த வெங்கடேசனை, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வெங்கடேசன் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா பரிந்துரையின் பேரில், வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News