அதியமான் பப்ளிக் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-11 02:39 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி  நடைபெற்றது. இக்கண்காட்சியின் துவக்க நிகழ்வாக கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய அறிவியலாளர் டாக்டர் சுப்ரமணியம் அவர்களைப் பள்ளி சாரண சாரணிய மாணவ மாணவிகள் அணிவகுத்து நின்று மேளதாளத்துடன் வரவேற்றனர். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், முதல்வர் லீனா ஜோஸ் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதில் அதியமான், ஒளவையார், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவள்ளுவர், பெருமாள், ஆண்டாள், கொற்றவை போன்ற பல்வேறு வேடம் அணிந்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர்.

மேலும் தமிழ்த்துறையில் கொலு கல்லணை கோயில் மாதிரிகள் போன்ற 15}க்கும் மேற்பட்ட காட்சி பொருட்களை தலா 30 மாணவர்களும் ஆங்கிலத் துறையில் எலிசபெத் வரலாறு புதிர் விளையாட்டு ஆங்கிலத்தில் புகழ் பெற்ற புலவர்கள் போன்ற 15 க்கும் மேற்பட்ட மாதிரிகளை தலா முப்பது மாணவர்களும், கணிதத்துறையில் வேதிக் மேக்ஸ்,மேத்தமேட்டிக்கல் இன்டக்சன் டவர் ஆப் ஆனாய், போன்ற 13க்கும் மேற்பட்ட காட்சி பொருட்களைத் தலா 16 மாணவர்களும், அறிவியல் துறையில் தானியங்கி தீயணைக்கும் ரோபோ, கார்பன்டைஆக்சைடு கொண்டு எரிபொருட்களை உருவாக்குதல், இதயம் செயல்படும் மாதிரி போன்ற 55 க்கும் மேற்பட்ட மாதிரிகளைத் தலா நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், சமூக அறிவியல் துறையில், காசோலை மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு, ஜாலியன் வாலாபாக் விடுதலை போராட்ட நிகழ்வு, ஹரப்பா நாகரிகம் போன்ற 25க்கும் மேற்பட்ட மாதிரிகளைத் தலா 55 க்கும் மேற்பட்ட மாணவர்களும், கணினித் துறையில் பறக்கும் கண்காணிப்பு கருவி, தானியங்கி மகிழுந்து போன்ற ஆறுக்கும் மேற்பட்ட மாதிரிகளை எட்டு மாணவர்களும் விவரித்துக் கூறினர்.

இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிறகு பொருட்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கெரவித்து, மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு செய்வன திருந்த செய் என்பன போன்ற பல அறிவுரைகளைக் கூறியும், பல நீதிநெறி கதைகளைக் கூறியும் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்ச்சியில் பதினோராம் வகுப்பு மாணவிகளான ஜீவிகா வரவேற்புரையாற்றினார். அர்பா தாஜ், புவநிஷா ஆகிய மாணவிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். இறுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேவ் சரண் நன்றி கூறினார்.

Tags:    

Similar News