கலைத் திருவிழா !

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில், மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில், கலைத் திருவிழா நடந்தது.

Update: 2024-03-23 08:12 GMT

 ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில், மாணவர்களின், கலைத் திருவிழா நடந்தது. 

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகை யில் 'ரிதம் -2024' என்ற தலைப்பில் கலைத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை நந்தா கல்வி நிறு வனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி சிறப்பு விருந்தினரா கக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் யு.எஸ்.ரகுபதி வரவேற்றார்.

இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறு முகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சென்னையை சேர்ந்த இ-கிரேட் நடனக் குழுவினர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறந்த நடனம், பாடல்கள் மற் றும் இசை அணியினை தேர்வு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் எம். கே. மூர்த்தி மற்றும் எஸ்.பிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News