நாமக்கல் பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா கோலாகலம்

நாமக்கல் பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுத்துறையில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

Update: 2024-02-12 05:01 GMT


நாமக்கல் பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுத்துறையில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா பள்ளி செயலாளர் கந்தசாமி தலைலையில் நடைபெற்றது. பள்ளி துணைத்தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் வக்கீல் வெங்காடசலசம், துணைச் செயலாளர் தங்கராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு ஆவின் பொது மேலாளர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், விளையாட்டுத்துறையில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். நமது கலாச்சாரத்தையும், தேசபற்றையும் விளக்கும் வகையில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி இயக்குனர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News