கலைஞரின் நூற்றாண்டு விழா: தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண்டன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் கே.தில்லைமணி, செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மை இயக்குநர் ஆர்.வயிரவன், முதன்மை செயல் அதிகாரி முனைவர்.ஏ.வி.எம்.எஸ்.கார்த்திக், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.