சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
Update: 2023-12-28 06:13 GMT
ஆருத்ரா தரிசனம்
கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடந்தது. நடராஜருக்கு வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, ருத்ர மந்திரங்களை வாசித்து, அலங்கார தீபங்களுடன் பூஜைகள் செய்தனர். சிவனடியார்கள் சிவபுராணம் பாடியபின் திரை நீக்கி ஆருத்ரா தரிசன நடந்தது. சமூகநல ஆர்வலர் தங்கராஜன் வைபவத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. அம்பிகேஸ்வரன் குருக்கள் குழுவினர் ஆருத்ரா பூஜைகளை செய்தனர்.