தேவகோட்டை சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
தேவகோட்டை சிவன் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.;
Update: 2023-12-28 02:32 GMT
அபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடராஜருக்கு மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெற வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடராஜர், சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அலங்கார மண்டபத்தில் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மற்றும் 16 வகை அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ருத்ராட்ச கேடயத்தில் சுவாமி எழுந்தருளி திருவிதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது